ஈரான் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு  

Estimated read time 1 min read

மேற்கு ஆசியாவில் ஒரு மாதமாக நீடித்து வரும் போரில் ஒரு முக்கியத் திருப்பமாக, ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை 10 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானிய அரசின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரான் அரசின் கோரிக்கையின்படி, அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை ஏப்ரல் 6, 2026 திங்கட்கிழமை இரவு 8 மணி வரை (அமெரிக்க நேரம்) நிறுத்திவைக்கிறேன். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமூகமாகவும், முன்னேற்றத்துடனும் நகர்ந்து வருகின்றன,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களில் வெளியாகும் எதிர்மறையான செய்திகளையும் அவர் இதன் மூலம் மறுத்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author