5ம் தேதி வேளச்சேரி-பரங்கிமலைக்கு அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

Estimated read time 1 min read

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் அதிவேக சோதனை ஓட்டம் 5ம் தேதி பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது

தெற்கு இரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட வேளச்சேரி -பரங்கிமலை (கி.மீ. 19.796 முதல் கி.மீ. 24.245 வரை) பறக்கும் இரயில் (MRTS) தடத்தில் புது டெல்லி முதன்மை இரயில்வே பாதுகாப்பு ஆணையர், 05-03-2026 வியாழக்கிழமை அன்று மதியம் 14:00 மணி முதல் மாலை 17:30 மணி வரை சிறப்பு இரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டத்தை நிகழ்த்த உள்ளார். ஆகையால் இந்நிகழ்வின்போது, அனுமதி இல்லாத நபர்கள் யாரும் இரயில் தண்டவாளங்களை நெருங்கவோ அதன் அருகில் வேலை செய்யவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author