2026ஆம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105ஆவது நிறைவு ஆண்டாகும்.

2021ஆம் ஆண்டின் ஜூன் முதல் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட மகத்தான எழுச்சி எனும் கண்ணோட்டத்தைச் சீன அதியுயர் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்தார். உண்மை மற்றும் மேன்மையை நிலைநிறுத்துல், கடமையை மனத்தில் வைத்துச் செயலாற்றுதல், தியாகம் செய்ய அஞ்சாதிருத்தல், துணிவுடன் போராடுதல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மீது விசுவாசம் வைத்தல்,  மக்களை நிராசையில் தள்ளாதிருத்தல் ஆகியவை இதன் முக்கிய அம்சமாகும்.

நடைமுறையாக்கத்தின்படி உண்மையை நிலைநிறுத்தியதால், நிலைமை எப்படி மாறினாலும், சீனா உரிய நேரத்தில் அவற்றைச் சரிப்படுத்திக் கொள்ள முடியும். மேலும், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட தொடக்கத்தில் தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளம் உருவாக்கப்பட்டது. அதற்குப் பிறகு, சீர்திருத்தத்தின் மூலம் சந்தைப் பொருளாதார முறை உருவாக்கப்பட்டது. புதிய யுகத்தில் உயர்தரமுள்ள வளர்ச்சிப் பாதையில் சீனா நடைபோட்டு, கூட்டுச் செழுமையை விரைவுபடுத்தி வருகிறது. இவை, சீனாவின் நிலைமைக்கு ஏற்ப, யுகத்தின் முன்னேற்ற ஓட்டத்திற்கு உட்புகுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த வரலாற்றுக் கடமை, உலகத்திற்கும் நலன் தந்துள்ளது. மனித குலத்தின் முன்னேற்றத்துக்காக நடைபோட்டு, உலகின் கூட்டுச் செழுமையை நனவாக்குதல் என்னும் கண்ணோட்டத்தில் சீனா உலகளவில் அறைகூவல்களைச் சமாளித்து வருகிறது. அதோடு, ஒருதலைச்சார்பான, பழிவாங்கல் நடவடிக்கைகளையும் சீனா கடுமையாக எதிர்த்து வருவதோடு,  வெளிநாட்டுத் திறப்பு அளவைத் தொடர்ந்து விரிவாக்கி வருகிறது. சீனாவின் நெடுநோக்கு வளர்ச்சித் திட்டம், தற்போதைய கொந்தளிப்பான உலகில் மிகவும் முக்கிய நிதானமான காரணிகளில் ஒன்றாகும். அது மட்டுமல்லாமல், இது உலக நிதானத்துக்கும் வலிமையான ஆதரவை அளிக்கும் என்பது திண்ணம்.

You May Also Like

More From Author