சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 9ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் மைக்ரோனேசியக் கூட்டாட்சி அரசு தலைவர் சிமினாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு சீன-மைக்ரோனேசிய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 35ஆவது ஆண்டு நிறைவாகும்.
மைக்ரோனேசியாவுடன் இணைந்து, பல்வேறு நிலை பரிமாற்றம் மற்றும் பேச்சுவார்த்தையை நிலைநிறுத்தி, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
தெற்கு தெற்கு ஒத்துழைப்பின் கட்டுக்கோப்புக்குள் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான உதவியை மைக்ரோனேசியாவுக்கு வழங்கி, ஆற்றல் வளர்ச்சி தொடர்பான பயிற்சி அளிக்கவும், ஐ,நா, பசிபிக் தீவுகள் மன்றம் முதலிய பலதரப்பு கட்டுக்கோப்புக்குள்ளான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பலதரப்புவாதத்தைக் கூட்டாக செயல்படுத்தவும் சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மைக்ரோனேசியா உள்ளிட்ட பசிபிக் தீவு நாடுகளின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கு நீண்டகாலமாக ஆதரவளித்து வருகின்ற சீனாவுக்கு சிமினா நன்றி தெரிவித்தார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுக்கோப்பின் கீழ் வேளாண்மை, மீன்பிடித் தொழில், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, எண்ணியல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பை ஆழமாக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.