ஜி.வி. பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்  

Estimated read time 1 min read

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள “ஹேப்பி ராஜ்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், வரும் மார்ச் 27-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
இவர் ‘லவ் டுடே’ படப்புகழ் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்
இது குறித்து ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில், “மார்ச் 27-ல் வர்றோம்” என்று பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக, 12 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்குகிறார்.
இவர் தவிர, ‘லவ்வர்’ படப்புகழ் ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

You May Also Like

More From Author