டிசம்பர் 4ஆம் நாள் பிலிப்பைன்ஸ் கடற்காவற்துறையின் படகும் பல மீன்பிடிப்புப் படகுகளும் சீனாவின் ஹூவாங்யன் தீவின் உரிமை கடற்பரப்புக்குன் ஊடுருவின.
அதனையடுத்து சீனக் கடற்படையானது சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப பிலிப்பைன்ஸ் படகுகளின் மீது தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிலிப்பைன்ஸின் இச்செயல் தென் சீனக் கடற்பகுதிப் பிரச்சினையில் மார்கோஸ் அரசின் ஆத்திரமூட்டும் கொள்கையுடன் ஒத்துப்போகிறது. சீனாவைப் பழிவாங்கி, சீன அச்சுறுத்தல் கோட்பாட்டை அவதூறு பரப்புவது இக்கொள்கையின் நேரடியான நோக்கமாகும்.
முன்னதாக ஹூவாங்யன் தீவுக்கான உரிமை கடற்பரப்பின் அடிப்படை கோடு பற்றி சீனக் குடியரசு வெளியிட்ட அறிக்கையையும் தொடர்புடைய பகுதிகளின் வரைபடங்களையும் சீனா ஐ.நா.விடம் டிசம்பர் 2ஆம் நாள் சமர்ப்பித்தது.
இது, ஐ.நா.வின் கடல்சார் சட்டம் பற்றிய பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடான சீனாவின் கடமையாகும். அதோடு, ஹூவாங்யன் தீவின் மீதான சீனாவின் இறையாண்மை மற்றும் நிர்வாக அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதுமாகும்.
தென் சீனக் கடற்பகுதியைப் பொருத்தவரை, பிலிப்பைன்ஸின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் சீனா-பிலிப்பைன்ஸ் கடல்சார் வேறுபாடுகளின் கட்டுப்பாடு மற்றும் இருதரப்பு உறவினைப் பாதிக்கும். தென் சீனக் கடற்பகுதி நிலைமையில் குழப்பத்தையும் ஏற்படுத்தும். ஆனால், இது போன்ற நடவடிக்கைகளால் தென் சீனக் கடற்பகுதியின் அமைதி மற்றும் நிதானமான நிலைமையை முறியடிக்க முடியாது என்பதோடு, தென் சீனக் கடற்பகுதியின் நீர் வழி பயணத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படாது.
பிலிப்பைன்ஸுடன் பேச்சுவார்த்தையின் மூலம் தென் சீனக் கடற்பகுதியின் சர்ச்சைகளைத் தீர்ப்பதில் சீனா எப்போதும் ஊன்றி நின்று வருகின்றது. அதேவேளை, சீனாவின் உரிமை பிரதேசங்களின் இறையாண்மையையும் கடல்சார் உரிமையையும் தொடர்ந்து உறுதியாகப் பேணிக்காக்கும்.
இதுபோன்ற சம்பவங்களை பிலிப்பைன்ஸ் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்தால், அதற்கான உரிய விலையைப் பிலிப்பைன்ஸ் உறுதியாகக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.