யஷ் நடிப்பில் உருவான ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு  

Estimated read time 1 min read

கே.ஜி.எஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, நான்கு ஆண்டுகள் இடைவெளி விட்டு யஷ் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்ஸிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான இப்படம் வரும் மார்ச் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாவதாக இருந்தது.
எனினும் தற்போது படத்தின் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது.
சர்வதேச சந்தையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், போர் சூழலால் உலகளாவிய வசூலில் பாதிப்பை சந்திக்கக்கூடும் எனத் தயாரிப்பு நிறுவனம் கருதுகிறது.

You May Also Like

More From Author