சீன தேசிய அன்னிய செலாவணி பணியகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டு செப்டம்பர் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை, 3 இலட்சத்து 33 ஆயிரத்து 870 கோடி அமெரிக்க டாலராகும். ஆக்ஸ்ட் இறுதியில் இருந்ததை விட இது 0.5 விழுக்காடு அதிகரித்தது.
2025ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில், முக்கிய நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார தரவுகள், நாணய கொள்கை, எதிர்பார்ப்பு ஆகிய காரணங்களால், அமெரிக்க டாலர் குறியீடு சிறிதளவில் சரிவடைந்தது.
உலக நாணய சொத்துகளின் மதிப்பு அதிகரித்தது. சீனப் பொருளாதாரம் நிதானமான வளர்ச்சி, உயர் தர வளர்ச்சி முன்னேற்றிம் ஆகிய காரணங்களால் அன்னிய செலாவணி கையிருப்பு நிதானமாக மாரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது