உலகமே பதற்றத்தில் இருக்கும்போது கிம் ஜாங் உன் செய்த காரியம்.. பகீர்..!! 

Estimated read time 0 min read

ஈரான் அணுசக்தி விவகாரம் காரணமாக, அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து வரும் இந்தத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், அப்பகுதியே பெரும் பதற்றமான சூழலில் சிக்கியுள்ளது.

இந்த உலகளாவிய பதற்றத்திற்கு இடையே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடலில் இருந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை நேற்று நேரில் மேற்பார்வையிட்டார்.

நம்போ துறைமுகத்தில் நடந்த இந்தச் சோதனையை ஒரு பெரிய வெற்றியாகக் குறிப்பிட்ட அவர், புதிய போர்க்கப்பல்களின் திறனை மேம்படுத்த இது மிக முக்கியமானது என்றும், இது வடகொரியாவின் கடல்சார் பாதுகாப்பில் வரலாற்றுப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author