செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரைடு? வருமான வரித்துறை அதிரடி மறுப்பு  

Estimated read time 1 min read

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக எழுந்த புகாருக்கு, வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தேர்தல் நேரத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்துள்ள நிலையில், செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர், இந்தி பேசும் அதிகாரிகளைக் கொண்டு ‘சோதனை’ என்ற பெயரில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் தன்னை சட்டவிரோதமாக முடக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்குச் செல்ல விடாமல் தடுப்பதற்கும், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கும் மத்திய அரசு முகமைகளைத் தவறாகப் பயன்படுத்துகிறது என அவர் பதிவிட்டிருந்தார்.

You May Also Like

More From Author