இனி கனடா டிகிரி இந்தியாவில் இருந்தே.. மாணவர்களின் கனவை நனவாக்கும் புதிய திட்டம்.. இந்திய மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! 

Estimated read time 1 min read

கனடா பிரதமர் மார்க் கார்னி கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தின்போது, கல்வித்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, இந்திய மாணவர்கள் கனடாவில் கல்வி பயில 100 மில்லியன் டாலர் உதவித்தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

டொராண்டோ பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 200 சிறந்த இந்திய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் படிப்புச் செலவு முழுவதையும் கனடா அரசே ஏற்கும்.மேலும், ‘கனடா-இந்தியா திறமை மற்றும் புத்தாக்க உத்தி’ என்ற திட்டத்தின் கீழ், இந்தியாவில் மூன்று புதிய கல்வி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதன் மூலம் மாணவர்கள் தங்கள் படிப்பை இந்தியாவில் தொடங்கி, பின்னர் கனடாவில் தொடர முடியும். செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில், இது போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கிடையேயான 13 ஒப்பந்தங்களும் இந்த பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author