அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ் சர்வதேச கல்லூரியிலுள்ள சீன மொழி வகுப்பின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி அவர்களுக்கும் கல்லூரியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
கடிதத்தில் ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சீன தேசத்தின் 5000 ஆண்டுகால நாகரிகத்தைச் சீன மொழி தாங்கி நின்று வருகிறது. சீன மொழியின் படிப்பு நீண்டகால வரலாறு மற்றும் நவீன சீனாவை அறிந்து கொள்வதற்கு துணை புரியும். அது மட்டுமல்லாமல், சீனா, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் அருமையான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் பாலத்தைக் கட்டியமைப்பதற்கும் இது துணை புரியும் என்றார்.
நீங்களும் மேலதிக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய இளைஞர்களும் சீனாவுக்கு வருகை புரிந்து கல்வி, பயணம் அல்லது சுற்றுலா செய்வதை வரவேற்கிறேன். உண்மையான பன்முகமான, திறப்பு மற்றும் முன்னேறிய சீனாவை நேரில் அறிந்து கொண்டு சீன மொழியை உங்கள் வாழ்க்கையில் துணை இருக்கும் நண்பராக்குவதை வரவேற்கிறேன் என்று அவர் வலியுறுத்தினார்.
