நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

Estimated read time 1 min read

நவராத்திரியை முன்னிட்டு சென்னையில் நடைபெற்று வரும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி, இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நவராத்திரி பாடல்கள் கேட்க

நவராத்திரி விழாவை முன்னிட்டு,, ஆன்மிகத்தையும் நவீன இசையையும் இணைத்து, இன்றைய இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில், ‘ஜென் ஸீ பஜன்’ என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில், தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. High On Events முன்னெடுக்கும் இந்த நிகழ்ச்சி, அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கி, 19-ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது.

பாரம்பரிய பஜனைப் பாடல்கள், கர்நாடக இசை, நேரடி இசைக்குழு நிகழ்ச்சிகள் மற்றும் நவீன இசை வடிவங்கள் என ஆன்மிகத்தையும் இன்றைய தலைமுறையின் இசை ரசனையையும் இணைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் ஜனம் தொலைக்காட்சியும் இந்த நிகழ்ச்சியை இணைந்து வழங்குகிறது. மேலும், பிற அமைப்புகளும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.

நிகழ்ச்சியின் முதல் நாளான அக்டோபர் 11-ஆம் தேதி, எமயவரம்பன் மற்றும் அவரது இசைக்குழுவினர் பங்கேற்று, முருகன் பஜனைப் பாடல்களுடன் பக்தி இசை நிகழ்ச்சியை வழங்கினர். மரபையும் நவீனத்தையும் இசையின் மூலம் இணைக்கும் இந்த முயற்சி இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

You May Also Like

More From Author