“உங்க சட்டை நல்லா இருக்குங்க”- அமைச்சர் ஆனந்தைப் பார்த்து வியந்த பிரதமர் மோடி!

Estimated read time 1 min read

சென்னை விமான நிலைய வரவேற்பில் நடந்த சுவாரசிய நிகழ்வு இணையத்தில் வைரலாகிவருகிறது.

பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த பிரதமரை, தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் பிரதமரை வரவேற்றபோது, அவரது சட்டையில் முதல்வர் விஜய்யின் புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து பிரதமர் வியப்படைந்தார். அந்தப் புகைப்படத்தின் மீது கைவைத்தபடி பிரதமரே, “உங்கள் புகைப்படத்தைச் சட்டையிலேயே அமைச்சர் வைத்திருக்கிறாரே!” என்று ஆச்சரியத்துடன் கேட்க, முதல்வர் விஜய் புன்னகையோடு தலையசைத்தார். தொடர்ந்து அமைச்சர் ஆனந்தைப் பார்த்து, “நன்றாகப் பண்ணுறீங்க… வாழ்த்துக்கள்!” என பிரதமர் மோடி பாராட்டி சென்றார்.

You May Also Like

More From Author