சென்னை மெட்ரோ ரயில் மஞ்சள் வழித் தடத்திற்கான கட்டணம் அறிவிப்பு.
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் முக்கிய பகுதியான பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரையிலான ‘மஞ்சள் வழித்தடத்திற்கான’ (Yellow Line) பயணக் கட்டணப் பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் குறைந்தபட்ச பயணக் கட்டணமாக ரூ.10 மற்றும் அதிகபட்ச பயணக் கட்டணமாக ரூ.40 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பூவிருந்தவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வடபழனி நோக்கிச் செல்லும் தினசரிப் பயணிகள், வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த கட்டண விகிதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வழித்தடக் கட்டண விவரங்கள்:
• பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ — ₹10
• பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மெட்ரோ — ₹10
• பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை மெட்ரோ — ₹20
• கரையான்சாவடி மெட்ரோ — ₹20
• குமணஞ்சாவடி மெட்ரோ — ₹20
• காட்டுப்பாக்கம் மெட்ரோ — ₹20
• அய்யப்பன்தாங்கல் மெட்ரோ — ₹30
• தளம்பாக்கம் மெட்ரோ — ₹30
• போரூர் புறவழிச்சாலை மெட்ரோ — ₹30
• போரூர் சந்திப்பு மெட்ரோ — ₹30
• வடபழனி மெட்ரோ — ₹40
பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மெட்ரோ: பூவிருந்தவல்லி புறவழிச்சாலையிலிருந்து பேருந்து நிலையம் மெட்ரோ நிலையத்திற்குச் செல்ல ரூ.10 கட்டணமாகப் பெறப்படுகிறது.
ரூ.20 கட்டணப் பகுதிகள்:
பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை மெட்ரோ
கரையான்சாவடி மெட்ரோ
குமணன்சாவடி மெட்ரோ
காட்டுப்பாக்கம் மெட்ரோ
ரூ.30 கட்டணப் பகுதிகள்:
அய்யப்பன்தாங்கல் மெட்ரோ
தெள்ளியரகரம் மெட்ரோ
போரூர் புறவழிச்சாலை மெட்ரோ
போரூர் சந்திப்பு மெட்ரோ
வடபழனி வரை செல்லும் கட்டணம்: பூவிருந்தவல்லி புறவழிச்சாலையிலிருந்து இறுதி நிலையமான வடபழனி மெட்ரோ நிலையத்தைச் சென்றடைய ரூ.40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
