அண்மையில் அமெரிக்கா 245 விழுக்காடு சுங்க வரியை சீனா எதிர்நோக்கக் கூடும் எனத் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஏப்ரல் 17ஆம் நாள் கூறுகையில், சீனா மீது அமெரிக்க பல முறையாக சுங்க வரியை அதிகரிப்பது, கேலிக்கூத்தான ஒன்றாகும். இதற்குப் பொருளாதார ரீதியில் நடைமுறை அர்த்தம் ஏதுவுமில்லை என்று தெரிவித்தார்.
அமெரிக்கா மேற்கொண்டு வரும் சுங்க வரி விளையாட்டுகளை சீனா இனி பொருட்படுத்தாது. அதோடு, சீனத் தரப்பின் நலன்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து தீங்கு விளைவிக்க நினைத்தால், அதற்கு சீனா எப்போதும் உறுதியான பதில் நடவடிக்கைகளை வழங்கும் என்றார்.