மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

Estimated read time 0 min read

தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடியும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் கூட்டாக தொடங்கிவைத்தனர்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், சென்னையின் மூன்றாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு துரிதமாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கூறிய முதலமைச்சர், ஓசூர் முதல் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ திட்டத்துக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author