இந்திய பங்குச் சந்தை திங்கட்கிழமை (ஜனவரி 12) காலை வர்த்தகத்திலேயே கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்து 83,123 என்ற அளவில் வர்த்தகமானது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 120 புள்ளிகளுக்கு மேல் குறைந்து 25,556 என்ற நிலையை எட்டியது. இந்தத் தொடர் சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.
சரிவில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி அடைய என்ன காரணம்?
