இந்தியாவின் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வேளையில், இந்தியாவின் நிதி மேலாண்மை மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை எப்போது தொடங்கியது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
இந்தியாவின் முதல் பட்ஜெட் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஏப்ரல் 7, 1860 அன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் ஜேம்ஸ் வில்சன் என்ற ஆங்கிலேயர் ஆவார்.
இவர் தி எகனாமிஸ்ட் இதழின் நிறுவனர் மற்றும் இந்திய கவுன்சிலின் நிதி உறுப்பினராக இருந்தவர்.
