தற்போதைய கொந்தளிப்பான உலகில், முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகம் சீனாவில் உயர் திறனுள்ள முறையில் இயங்கி வருகிறது. பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் வரைவானது, இவ்வாண்டில் 14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரில் பரிசீலனை செய்யப்பட்டது. சீனச் சமூகத்தின் நீண்டகால, நிதானமான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் ஜனநாயக அமைப்பு முறையில் உலகம் மேன்மேலும் கவனம் செலுத்தி வருகிறது. இது, சீனாவின் ஆட்சிமுறையை அறிந்துகொள்வதற்குரிய திறவுகோலாகும். தேர்தல், கலந்தாலோசனை, கொள்கை தீர்மானம், மேலாண்மை, கண்காணிப்பு என அனைத்துச் செயல்முறைகளிலும் ஜனநாயகம் இருக்கிறது என்பது அதன் முக்கிய அடையாளம் ஆகும். இது, மனித குல அரசியல் நாகரிகத்திற்கு மற்றொரு சாத்தியமாக விளங்குகிறது.
தொடர்புடைய தரவுகளின்படி, 15ஆவது ஐந்தாண்டு வரைவு திட்டம் இயற்றப்பட்ட காலகட்டத்தில், தொடர்புடைய வாரியங்கள் இணைப்பு மேடையின் மூலம் 3 இலட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேல் ஆலோசனைகளைப் பெற்றுள்ளன. அவற்றுள் சில வரைவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தவிரவும், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் உள்ளிட்ட வாரியங்கள், அறிவியல் ஆராய்ச்சி பணியாளர்கள், விவசாயிகள், மாற்றுதிறனாளிகள் உள்ளிட்ட 11 துறையினரிடம் இருந்து கருத்துகளையும் ஆலோசனைகளையும் சேகரித்தன. செயற்கை நுண்ணறிவு, பண்பாட்டு மரபுச் செல்வ பாதுகாப்பு உள்ளிட்ட துறையினர்களின் கருத்துகளும் இந்த விரைவுத் திட்டத்தில் திரட்டப்பட்டுள்ளன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் ஜனநாயகம் என்பது அலங்காரம் அல்ல. அது, பொது மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
