புதிய சுற்று சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வு விரைவில் தொடக்கம்

 

சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், 13ஆம் நாள், சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாய்வு தொடர்புடைய தகவல்கள் குறித்து செய்தியாளர்களுக்குப் பதிலளித்தார்.

 

அப்போது அவர் கூறுகையில்,சீனாவும் அமெரிக்காவும் விவாதம் மூலம் கூட்டாகத் தீர்மானித்ததன்படி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான ஹே லிஃபேங் மார்ச் 14ஆம் நாள் முதல் 17ஆம் நாள் வரை, சீனப் பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி, பிரான்ஸுக்குச் சென்று அமெரிக்கத் தரப்புடன் பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாய்வை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளின் அரசுத் தலைவர்களின் புசான் பேச்சுவார்த்தை மற்றும் அதற்கு முன்பாக பல முறை எட்டப்பட்ட முக்கிய ஒத்த கருத்துகளின் வழிகாட்டலில், இரு தரப்பும் அக்கறை கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து இக்கலந்தாய்வு நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

More From Author