சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தால் மாபெரும் முன்னேற்றம் கண்ட சிட்சாங்

இவ்வாண்டு, சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசம் அமைதியான முறையில் விடுதலை பெற்ற 75ஆவது ஆண்டு நிறைவாகும். இது குறித்து, சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் பொது மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன்படி, சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூகத்திற்கான மாபெரும் முன்னேற்றத்திற்குச் சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கம் பெரும் நன்மை அளித்துள்ளதாக 74.8 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர்.

2025ஆம் ஆண்டில், சிட்சாங்கில் கிராமப்புற மக்களின் நபர்வாரி செலவழிப்பு வருமானம் 23 ஆயிரத்து 184 யுவானாகும். அதோடு, 6 இலட்சத்து 28 ஆயிரம் பேர் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். சி.ஜி.டி.என்னின் கருத்துக் கணிப்பில் 80.6 விழுக்காட்டினர்கள், சிட்சாங்கின் வறுமை ஒழிப்புப் பணியின் சாதனைகளை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

உயிரினச் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வதோடு, பொருளாதார அதிகரிப்புக்கு நன்மை பயக்கும் பசுமையான வளர்ச்சிப் பாதையையும் சிட்சாங் முயற்சியுடன் நாடி வருகிறது. இத்தன்னாட்சி பிரதேசத்தன் உயிரின சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையின் பயன்களை 83 விழுக்காட்டினர்கள் பாராட்டியுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author