உலகிற்கு நிலைத்தன்மையை வழங்கும் உலகளாவிய நாகரிக முன்மொழிவு

மாற்றங்கள் மற்றும் குழப்பங்கள் நிறைந்திருக்கும் சர்வதேச சமூகத்தில் நிலைத்தன்மையே பல்வேறு நாடுகள் தேடி வரும் அரிதான பொருள். வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு நிலைத்தன்மை அவசியமானது.

இதற்கு வேறுபட்ட நாகரிகங்களின் சகவாழ்வு மற்றும் பரிமாற்றமும் முக்கிய அம்சமாகும். சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன், சீன ரென்மின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 41 நாடுகளைச் சேர்ந்த 12302 நபர்களிடையே மேற்கொண்ட கருத்து கணிப்பின்படி, சீனா முன்வைத்த உலகளாவிய நாகரிக முன்மொழிவு வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது.

நாகரிகங்களின் பல்வகைமையை மதிப்பது சர்வதேச சமூகம் பின்பற்ற வேண்டிய அடிப்படை கோட்பாடு என்று இக்கருத்துக் கணிப்பில் 90.8 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில், ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களில் நாகரிகங்களின் சமத்துவத்தை அங்கீகரிக்கும் விகிதம் மேலும் அதிகம்.

அமைதி, வளர்ச்சி, நேர்மை, நீதி, ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவை பல்வேறு நாட்டு மக்களின் பொதுவான நோக்கம் என்றும், வேறுபட்ட நாகரிகங்களின் கீழ் மதிப்பின் உள்ளடக்கம் பற்றிய அறிவுக்கு போதிய அளவில் மதிப்பு மற்றும் புரிந்துணர்வு அளிக்க வேண்டும் என்றும் சீனா எப்போதும் கருதுகிறது. இதற்கு 91.8 விழுக்காட்டினர் அங்கீகாரம் அளித்துள்ளனர். அங்கீகார அளவின்படி முதல் 10 நாடுகள் அனைத்தும் உலகளாவிய தெற்கு நாடுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாகரிக உரையாடல் சர்வதேச மோதலைக் குறைக்கவும் உலக அமைதியை மேம்படுத்தவும் உதவும் என்றும் இக்கருத்துக் கணிப்பில் 87.4 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author