கடல் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சி பற்றிய ஷி ச்சின்பிங்கின் கட்டுரை ஜியூஷி இதழில் வெளியீடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசு தலைவருமான ஷி ச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை, கடல் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சியை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் ஜியூஷி இதழில் மார்ச் 16ஆம் நாள் வெளியிடப்பட உள்ளது.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு, சீனா ஒழுங்கான முறையில் கடலை பயன்படுத்தி வளர்த்து வருகிறது. சீர்திருத்தம் மற்றும் திறப்புக்குப் பின்பு, நாட்டின் கடல்சார் பொருளாதாரம் விரைவான வளர்ச்சி கட்டத்தில் நுழைந்தது. சீன பாணியுடைய நவீனமயமாக்கலை முன்னேற்றுவதற்காக, கடலை பயனுள்ளதாக வளர்த்து பயன்படுத்தவும், கடல் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சீன தனிச்சிறப்புடைய கடல்சார் வளர்ச்சி பாதையை உருவாக்கவும் வேண்டும்.

மேலும், கடல்சார் அறிவியல் தொழில்நுட்பத்தின் தற்சார்பு புத்தாக்க திறன்களை மேம்படுத்தவும், கடல் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதுகாப்பை வலுப்படுத்தவும், உலகளாவிய கடல் நிர்வாகத்தில் ஆழமாக பங்கேற்கவும் வேண்டும் என்றும் இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author