வேளாண்மை மற்றும் கிராமப்புற நவீனமயமாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கான 15வது ஐந்தாண்டுத் திட்டத்தை, சீன அரசவை அண்மையில் வெளியிட்டது. இத்திட்டத்தில், நிலைமைகளுக்கேற்ப வேளாண்மையின் புதிய தர உற்பத்தித் திறனை வளர்ப்பது, மேலும் முக்கியமான நெடுநோக்கு இடத்தில் வைக்கப்படுவதோடு, வேளாண் துறையின் புதிய தொழில்கள் மற்றும் எதிர்கால தொழில்களை வளர்க்க வேணடும் என முதன்முறையாக முன்வைக்கப்பட்டுள்ளது.
15வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில், சீனாவில் வேளாண் தொழில் நுட்பங்களின் தற்சார்ப்பு மற்றும் சுயவலிமை நிலை பெரிதும் உயர்ந்து, வேளாண் தொழில் நுட்ப முன்னேற்றத்தின் பங்கு விகிதம் 67 விழுக்காட்டை எட்டுவது என்ற வளர்ச்சி இலக்கு இத்திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளது.
நான்ஜிங் வேளாண் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ச்சியூ தொங்வெய் கூறுகையில், நுண்ணறிவு வேளாண்மை உள்ளிட்ட புதிய தொழில்களின் வளர்ச்சியை முன்னேற்றி, மரபணு தொகுப்பாக்கத்தின் மூலம் விதை வளர்ப்பு உள்ளிட்ட எதிர்காலத் தொழில்களை ஆக்கமுடன் வளர்ப்பது, சீன வேளாண் துறையின் உயர்தர வளர்ச்சியின் புதிய இயக்காற்றலைத் தீவிரமாக்குவதற்குத் துணைப் புரியும் என்றார்.
