மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புத் தூதர் ஜாய் ஜுன், 15ஆம் நாள் குவைத் நகரில் குவைத் வெளியுறவு அமைச்சர் ஜாராஹ் சந்தித்தார்.
ஜாய் ஜுன் கூறுகையில், தற்போதைய நிலையற்ற பிரதேச நிலைமையின் கீழ் குவைத் மற்றும் பிற வளைகுடா நாடுகளிலும் ஏற்பட்ட பாதிப்புகள் சீனா விரும்பத்தகாதவை என்றார். அப்பாவி பொதுமக்கள் மற்றும் இராணுவம் சாரா இலக்குகள் மீதான அனைத்து கண்மூடித்தனமான தாக்குதல்களையும் சீனா கண்டிக்கிறது. போர் நிறுத்தம் மிக அவசியம். இப்பகுதியில் நிலைமையை தணிப்பதில் ஆக்கபூர்வமான பங்கை அளிக்க குவைத்துடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
