ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டம் 4ஆம் நாள் காணொளி மூலம் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொளி வழியாக இக்கூட்டத்தில் பங்கெடுத்து முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு, உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பேணிகாப்பதற்கு அதிக உறுதித் தன்மையையும் நேர்மறையான ஆற்றலையும் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
தற்போதைய உலகில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மனித சமூகம் முன்னென்றும் கண்டிராத அறைகூவல்களை எதிர்கொள்கிறது. ஒற்றுமை அல்லது பிரிவினை? அமைதி அல்லது மோதல்? ஒத்துழைப்பு அல்லது எதிர்ப்பு? கால ஓட்டத்தில், “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற பெரிய குடும்பம்” எங்கு செல்ல வேண்டும்? இதற்கு ஷிச்சின்பிங்கின் உரையில் பதில் கிடைக்கும். அதாவது, ஒற்றுமை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். கூட்டுப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும். பயனுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். மக்களுக்கிடையிலான தொடர்பு மற்றும் புரிந்துணர்வை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.