ஈரானில் பயங்கர வெடிப்பு: அணுசக்தி மையத்தைக் குறிவைத்த அமெரிக்கா -இஸ்ரேல்  

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் மிக முக்கிய அணுசக்தி மற்றும் ராணுவ மையமான ‘இஸ்பஹான்’ (Isfahan) நகரின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து இன்று அதிகாலை பயங்கரமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலானது ஈரானின் ஆயுதக் கிடங்குகளை நிலைகுலைய செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் இஸ்பஹான் நகரின் இரவு வானம் ஆரஞ்சு நிறத் தீப்பிழம்புகளால் ஒளிர்வதும், அடுத்தடுத்து பல சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்வதும் பதிவாகியுள்ளது.

You May Also Like

More From Author