சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், செப்டம்பர் 19ஆம் நாளிரவு, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தற்போதைய சீன-அமெரிக்க உறவு மற்றும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாற்றி, அடுத்தக் கட்டத்தில் இரு நாட்டுறவு வளர்ச்சிக்கு வழிக்காட்டினர்.
ஷி ச்சின்பிங் கூறுகையில்,
சீன-அமெரிக்க உறவு மிக முக்கியமானது. சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கு ஒன்று பங்காற்றி, கூட்டு செழுமையை நனவாக்கி, இரு நாட்டு மக்களுக்கும் உலகிற்கும் நன்மை பயக்கும்.
அரசுத் தலைவர் தூதாண்மை, சீன-அமெரிக்க உறவு வளர்ச்சிக்கு வழிகாட்டி வருகின்றது. இரு நாட்டு அரசுத் தலைவர்களின் கலந்துரையாடல், இரு நாட்டு பொருளாதார வர்த்தக துறைகளின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து வழிகாட்டும். பொதுவாக, பேச்சுவார்த்தையின் மூலம், சீனா மற்றும் அமெரிக்கா, ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் அதிகரித்து, இணக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
திக்தோக் பிரச்சினையைச் சமாளிப்பதற்காக இரு நாடுகள் முக்கிய முன்னேற்றங்களை எடுத்துள்ளன என்பதை இந்த பேச்சுவார்த்தை வெளிக்காட்டியது. அதே வேளையில், சீனா அமெரிக்காவுக்கு தெரிவிக்கையில்,
அமெரிக்காவின் கவனத்தில் சீனா முக்கியத்துவம் அளிப்பதோடு, சீனாவின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்க கூடாது. இரு நாட்டு ஒத்துழைப்புகள், சமநிலை, மதிப்பு, ஒன்றுக்கு ஒன்று நலன் தருவது ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்றார்.