சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மார்ச் 19ஆம் நாள் அழைப்பை ஏற்று, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் இவெட் கூப்பர் அம்மையாருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
அப்போது, மத்திய கிழக்குப் பிரதேசத்தின் நிலைமை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்தத் தொலைபேசி உரையாடலின் போது சீனாவுடன் நெருக்கமாக தொடர்புக் கொள்ள பிரிட்டன் விரும்புவதாக கூப்பர் தெரிவித்தார். அதோடு, சீனாவின் நிலைப்பாட்டை வாங்யீ எடுத்துக்கூறினார்.
