ஐஎன்எஸ் அரிதமன்: இந்தியாவின் 3வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தயார்  

Estimated read time 1 min read

இந்தியாவின் பாதுகாப்புத் திறனை உலக அரங்கில் பறைசாற்றும் வகையில், மூன்றாவது உள்நாட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ‘ஐஎன்எஸ் அரிதமன்’ (INS Aridhaman) விரைவில் இந்திய கடற்படையில் இணையவுள்ளது.
இதனைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
“அரிதமன் என்பது வெறும் வார்த்தையல்ல, அது ஒரு சக்தி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சேவையில் உள்ள ஐஎன்எஸ் அரிஹந்த் (2016) மற்றும் ஐஎன்எஸ் அரிகாட் (2024) ஆகிய கப்பல்களைத் தொடர்ந்து, அரிதமன் தனது இறுதி கடல்சார் சோதனைகளை முடித்துவிட்டு, தற்போது போர் முனையில் இணையத் தயாராக உள்ளது.

You May Also Like

More From Author