அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை! சென்னையில் பரபரப்பு

Estimated read time 1 min read

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகையிட்டன.

ஈரான் சுப்ரீம் லீடர் அயாதுல்லா கொமேனி அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டு படைகளால் கொல்லப்பட்டார்.ராணுவ தளபதிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை அண்ணா சாலை பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.3 உதவி ஆணையர்கள் மேற்பார்வையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க தூதரகத்தை சுற்றியுள்ள கதீட்ரல் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பீட்டர்ஸ் சாலை பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை இஸ்லாமிய அமைப்புகள் முற்றுகையிட்டன. இந்த போராட்டத்தில் தமிமுன் அன்சாரி, தனியரசு, திருமாவளவன், கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஈரான் மீது தாக்குதல் – இந்தியா அமைதியாக இருப்பது நல்லதல்ல, அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் உலகப்போருக்கு வழிவகுக்கிறது” என்றார்.

You May Also Like

More From Author