சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 14ஆம் நாளிரவு சிறப்பு விமானத்தின் மூலம் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் சான் ஃப்ராங்சிஸ்கோவுக்குச் சென்றார். அமெரிக்க அரசுத் தலைவர் பைடனின் அழைப்பின் பேரில் செல்லும் அவர், இரு நாட்டு அரசுத் தலைவர் சந்திப்பில் கலந்துகொள்வதுடன் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளார்.