சீன ஊடகக் குழுமத்தின் ஏற்பாட்டில் வசந்த கால சீனா: சீனாவிலுள்ள வாய்ப்புகளும் உலகுடனான பகிர்வும் என்னும் தலைப்பிலான உலகளாவிய பேச்சுவார்த்தைக்கான சிறப்புக் கூட்டம் மார்ச் 11ஆம் நாள் எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் நடைபெற்றது.
இதில் சீனக் கம்யூனிஸ்ட்க் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹை சியோங் காணொளி மூலம் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் எத்தியோபியாவுக்கான சீனத் தூதர் சென் ஹை, எத்தியோப்பியக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஃபெகாடு சைகே உள்ளிட்ட இரு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறையினர்கள் கலந்து கொண்டு சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் திறந்த ஒத்துழைப்பு, ஆப்பிரிக்க நாடுகளின் தொடரவல்ல வளர்ச்சிக்கு “புதிய ஆற்றலைக்” கொண்டு வருவது குறித்து விவாதித்தனர்.