சீன வளர்ச்சி மன்றத்தின் 2026 ஆண்டு கூட்ட துவக்க விழாவில் லீச்சியாங்கின் உரை

Estimated read time 1 min read

சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் மார்ச் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன வளர்ச்சி மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கேற்று முக்கிய உரைநிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், 15ஆவது ஐந்தாண்டு திட்டம் சீன வளர்ச்சிக்கான புதிய திட்டம் மட்டுமல்லாமல், உலக வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளும் ஆகும் என்றார்.

சீனாவின் ஏற்றுமதியும் இறக்குமதியும் விதிகளின் கட்டுக்கோப்புக்குள் நடைபெறும் நியாயமான வர்த்தகமாகும். உயர் நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியை முன்னேற்றுவதில் சீனா உறுதியாக ஊன்றி நிற்கும். மேலதிக சிறந்த வெளிநாட்டு வணிகப் பொருட்களை இறக்குமதி செய்து பல்வேறு தரப்புகளுடன் இணைந்து மேம்பாடு மற்றும் சமச்சீரான வர்த்தக வளர்ச்சியை முன்னேற்றச் சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், உயர் தர வளர்ச்சியைச் சீனா பெரிதும் முன்னெடுத்து பொருளாதாரத்தின் நிதானமான வளர்ச்சியை முயற்சியுடன் நிலைநிறுத்தி சீரான வணிக சூழலைத் தொடர்ந்து உருவாக்கும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சீனாவில் சமமான அணுகு முறையை அனுபவிப்பதைப் பன்முகங்களிலும் செயல்படுத்தி சீனாவில் வணிகம் புரியும் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியடையச் சீனா பாடுபடும் என்றும் லீச்சியாங் கூறினார்.

 

You May Also Like

More From Author