மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி மாத திருப் பள்ளி எழுச்சி பூஜைகள் இன்று (16-ந்தேதி) தொடங்கி அடுத்த ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை நடக்கின்றன.
இந்த நாட்களில் அதிகாலையில் பக்தர்களுக்கு திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக வழக்கம் போல் திருஞானபால் வழங்கப்பட உள்ளது. மேலும் மார்கழி மாதத்தையொட்டி கோவில் வெளிக்கோ புர கதவுகள் அதிகாலையில் 3.30 மணிக்கு திறக்கப்பட்டு, உச்சிக்கால பூஜை முடிந்து பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு பல்லக்கு புறப்பாடாகி இரவு 9.30 மணிக்குள் பூஜைகள் முடிந்தவுடன் கோவில் நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கூடலழகர் பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தை யொட்டி இன்று (16-ந் தேதி) முதல் ஜனவரி 13-ந் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். மேலும் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியை தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். பகல் 11.30 மணிக்கு நடை சாத்தப்படும்.
பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் என தெரிவிக்கப்
பட்டுள்ளது.