2025ஆம் ஆண்டு சீனா-கலிபோர்னியா பொருளாதார வர்த்தக மன்றக் கூட்டம் 2ஆம் நாள் அமெரிக்காவின் மேற்கிலுள்ள முதலாவது பெரிய நகர் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
சீன மற்றும் அமெரிக்காவின் அரசியல் மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த சுமார் 500 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். சீனாவின் பல்வேறு நகரங்கள் மற்றும் மாநிலங்கள், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்துடன் பிரதேச பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பையும், மானிடப் பண்பாட்டியல் பரிமாற்றத்தையும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்த மன்றக் கூட்டம், இரு தரப்பும் தொடர்பை வலுப்படுத்தி வணிக வாய்ப்புகளை விரிவாக்குவதற்கான முக்கிய மேடையாகும். இம்மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் பேசிய லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள சீனத் துணை நிலைத் தூதர் குவோ ஷோச்சுன், இதன் மூலம், சீன-அமெரிக்க பிரதேச ஒத்துழைப்புகளின் உயிராற்றலை மேலும் வெளிக்கொணர்ந்து சீன-அமெரிக்க உறவின் நிலைப்பு, சுமுகம் மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கும் நம்பிக்கை மற்றும் உந்து ஆற்றலைக் கொண்டு வரலாம் என்று தெரிவித்தார்.