சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் 23ஆம் நாள் காலை ஹெபெய் மாநிலத்தின் சிவுங் அன் புதிய பிரதேசத்தில் கள ஆய்வு மேற்கொண்டு இப்பிரதேசத்தின் உயர் தர கட்டுமானம் மற்றும் வளர்ச்சியை ஆழமாக முன்னேற்றுவதற்கான கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் வலியுறுத்துகையில், பெய்ஜிங்கின் தலைநகர் சாராத செயல்பாடுகளை வெளியேற்றுவது சிவுங் அன் புதிய பிரதேசத்தின் முதன்மை செயல்திறன் ஆகும் என்பதை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். நெடுநோக்கு வாய்ந்த உறுதியையும் வரலாற்று பொறுமையையும் நிலைப்படுத்த வேண்டும். சீர்திருத்த புத்தாக்கத்தை வழிக்காட்டலாக கொண்டு உள்ளார்ந்த உந்து ஆற்றலை வலுப்படுத்த வேண்டும். வளங்களை உரிய முறையில் ஒன்றிணைப்பதன் மூலம் புதிய பிரதேசத்தின் உயிராற்றலை வெளிக்கொணர வேண்டும். இப்பிரதேசத்தைப் புதிய யுகத்தில் புத்தாக்கம் மற்றும் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முன்மாதிரியாக கட்டியமைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
