ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் இலாபம்-15.5 விழுக்காடு அதிகரிப்பு

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனத் தேசியளவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் இலாபம் ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 604 கோடி யுவானை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 15.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதில் அரசு சார் தொழில் நிறுவனங்களின் இலாபம், கடந்த ஆண்டை விட 10.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. பங்குதாரர் நிறுவனங்களின் அதிகரிப்பு விகிதம் 20.9 விழுக்காடாகும். வெளிநாட்டு, ஹாங்காங் மற்றும் தைவான் முதலீடு நிறுவனங்களின் அதிகரிப்பு விகிதம் 1.2 விழுக்காடாகும். தனியார் தொழில் நிறுவனங்களின் இலாபம் 25.4 விழுக்காட்டு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author