தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபி கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த நிலையில், அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு கொங்கன் கடல், அதனை ஒட்டிய பகுதிகளுக்கு அப்பால் மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்