மார்ச் பிற்பகுதியில் நடைபெற்ற சீன வளர்ச்சி மன்றத்தின் 2026ஆம் ஆண்டுக்கூட்டத்தில், சுமார் நூறு பன்னாட்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் பங்கெடுத்தனர்.
அண்மையில், சீனாவின் 15வது ஐந்தாண்டுத் திட்டம் பற்றி, பன்னாட்டு நிறுவனங்கள் பலமுறை குறிப்பிட்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.
ஜெர்மனியின் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இயக்குநர் குழுத் தலைவர் ஆலிவர் ப்ளூம் கூறுகையில், சீனர்கள் ஐந்தாண்டுத் திட்டம் மூலம் திட்டமிட்ட முறையில் இலக்குகளை அமைத்ததோடு, தெளிவான முன்னுரிமை கொண்ட பணிகளை ஏற்பாடு செய்கின்றனர் என்றார். மேலும், தொடர்புடைய விவகாரங்களை முன்னெடுக்கும் போது சீனர்கள் வெளிப்படுத்தும் உயர் ஒழுக்கம் மற்றும் செயலாக்கத் திறனை தாங்கள் காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சீன அரசு கொள்கையின் உறுதித்தன்மையுடன், அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் நிதானமாக பணிகளை ஏற்பாடு செய்து, நீண்டகால இலக்குகளை அமைக்க முடியும்.
மேலும், பெரிய அளவிலான சீனச் சந்தையின் உள்ளார்ந்த ஆற்றல், இந்த உறுதித்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கான மற்றொரு காரணமாகும்.
14வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில், சீனாவின் நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 10 ஆயிரம் அமெரிக்க டாலரிலிருந்து 13 ஆயிரம் டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. சேவை நுகர்வு வலிமையான போக்குடன் அதிகரித்துள்ளது. நடப்பு மன்றக்கூட்டத்தில், மேலதிக வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்து, பல்வேறு தரப்புகளுடன் வர்த்தகத்தின் சீரான மற்றும் சமமான வளர்ச்சியை முன்னேற்றி, உலகப் பொருளாதார மற்றும் வர்த்தக பங்களிப்பை விரிவாக்குவதாக சீனா வாக்குறுதி அளித்துள்ளது.
மேலும், சீனாவில் பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் கவலையின்றி செயல்பட்டு வளர்ச்சியடையும் வகையில், சீரான வணிகச் சூழ்நிலையைத் தொடர்ந்து உருவாக்கி, அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களுக்கான தேசிய நிலை அனுகுமுறையைப் பன்முகங்களிலும் செயல்படுத்துவதாகவும் சீனா மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளது.
சீனாவில் முதலீடு செய்வது, எதிர்காலத்தில் முதலீடு செய்வதாகும் என்பது, அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் ஒத்தக் கருத்தாக மாறியுள்ளது.
