சொந்தக் கட்சியினரே செய்த துரோகம்… அதிர்ச்சியில் மம்தா…!!! 

Estimated read time 1 min read

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் தற்போது ஒரு புதிய அதிர்ச்சித் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சிதான் (பாஜக) இருக்கிறது என்று முன்னால் முதலமைச்சர் மமதா பானர்ஜியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரும் தொடக்கத்தில் தீவிரமாகக் குற்றம் சாட்டி வந்தனர்.

ஆனால், இந்த வழக்குத் தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள தபன் மைத்தி, தேபஷிஷ் தத்தா, காஜல் தாஸ் மற்றும் செங்குப்தா ஆகிய நபர்கள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான லவ்லி மைத்ராவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்த்தரப்பைக் குற்றம் சாட்டிய நிலையில், சொந்தக் கட்சியின் முன்னாள் பிரமுகருக்கு நெருக்கமானவர்களே இதில் பிடிபட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author