2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனாவுக்கு வருகை தந்துள்ள சர்வதேச விருந்தினர்களை வரவேற்கும் விதம், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், தனது மனைவி பெங் லீயுவான் அம்மையாருடன் இணைந்து, ஆகஸ்டு 31ஆம் நாள் இரவு தியான்ஜின் மாநகரில் விருந்தளித்தார்.
இந்த உச்சிமாநாட்டில் பங்கெடுக்கவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள், பேச்சுவார்த்தை கூட்டாளி நாடுகள் முதலியவற்றைச் சேர்ந்த 20க்கும் மேலான அரசுத் தலைவர்கள், தலைமையமைச்சர்கள் மற்றும் தங்களது மனைவிகள், ஐ.நா தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 10 சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் முதலியோர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உரை நிகழ்த்திய போது, சீன அரசு மற்றும் சீன மக்களின் சார்பில், சர்வதேச விருந்தினர்களுக்கு மனமார்ந்த வரவேற்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சிகளுடன், நடப்பு உச்சிமாநாடு வெற்றி பெறுவது உறுதி என்றும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மேலும் பெரும் பங்காற்றி, மேலும் பெரும் வளர்ச்சியடையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்
