சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மார்ச் 25ஆம் நாளன்று முறையே எகிப்து வெளியுறவு அமைச்சர் அப்துல்லாட்டி, துருக்கி வெளியுறவு அமைச்சர் ஃபெடன்டன் ஆகிய இருவருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.
அப்போது இம்மூன்று வெளியுறவு அமைச்சர்கள் மத்திய கிழக்குப் பிரதேசத்தின் நிலைமை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இத்தொடர்பின் போது, மோதலில் சிக்கியுள்ள தொடர்புடைய தரப்புகள் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வாங்யீ, அமைதிக்கான பேச்சுவார்த்தையை மீட்கவும், போர் நிறுத்தத்தை நனவாக்கவும் சீனா ஆக்கப்பூர்வமாக பங்காற்ற விரும்புவதாகவும் வாங்யீ தெரிவித்தார்.
