14ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் 18ஆவது கூட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது முழு அமர்வு 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றன. தைவான் மீட்கப்பட்ட நினைவு நாள் பற்றிய தீர்மானம் இந்த அமர்வில் அங்கீகரிக்கப்பட்டது.
1945ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள், தைவான் மற்றும் பங்ஹூ தொடர் தீவுகளின் மீதான ஆட்சியுரிமை சீனாவுக்குத் திரும்பியது. இதை நினைவு கூர்ந்து, 2ஆவது உலக போரின் சாதனையைப் பேணிகாத்து, தைவான் நீரிணை இருக்கரை மக்களின் கூட்டு தேசிய வரலாற்று நினைவை வலுப்படுத்தி, சீன ஒன்றிணைப்பு போக்கை முன்னேற்றும் வகையில், தைவான் மீட்கப்பட்ட நினைவு நாளை அமைப்பது பற்றி சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தீர்மானத்தை பரிசீலனை செய்ய தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் முன்மொழிந்தார்.
