சீனா அமெரிக்கா இடையே பொருளாதார வர்த்தகத்திற்கான உயர் நிலை பேச்சுவார்த்தை

ஸ்விட்சர்லாந்து அரசின் அழைப்புக்கிணங்க, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான ஹெலிஃபேங், மே 9ஆம் நாள் முதல் 12ஆம் நாள் வரை, அந்நாட்டில் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சவார்த்தை நடத்த உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இப்பயணத்தின் போது, சீன-அமெரிக்க பன்முகப் பொருளாதார உயர் நிலை கலந்தாய்வுக்கான சீனத் தரப்புத் தலைவருமான ஹெலிஃபேங், அமெரிக்க தரப்புத் தலைவருமான அமெரிக்க நிதித் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மே 12ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை, பிரான்ஸுக்குச் சென்று, அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, சீன-பிரான்ஸ் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்கள் குறித்த 10ஆவது உயர் நிலை பேச்சுவார்த்தைக்கு ஹெலிஃபேங் தலைமை தாங்க உள்ளார்.

You May Also Like

More From Author