அமெரிக்க மத்திய அரசின் மொத்த கடன் தொகை 35லட்சம் கோடி டாலரைத் தாண்டியுள்ளது என்று அமெரிக்க நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் 29ஆம் நாள் தகவல் வெளியிடப்பட்டது.
இந்த பெரும் கடனை அமெரிக்க மக்கள் மீது சுமத்தினால், ஒவ்வொருவருக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 4ஆயிரம் டாலர் கடன் வரும் என்று அமெரிக்க பீட்டர் பீட்டர்சன் நிதியம் கணித்துள்ளது.
வயதானவர்களின் எண்ணக்கை அதிகரிப்பு, மருத்துவச் செலவு உயர்வு, வரி வசூல் குறைவு ஆகியவை இந்நிலையை ஏற்படுத்தியதன் முக்கிய காரணமாகும் என்று இந்த நிதியம் தெரிவித்தது.