அளவுக்கு மீறி தடைகளை மேற்கொள்ளும் அமெரிக்காவின் செயலை நிறுத்த வலியுறுத்திய சீனா

ஈரானுடனான தொடர்பு என்ற காரணத்தின் அடிப்படையில் சீனாவின் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றின் மீது தடைகளை மேற்கொள்வதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் 27ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சர்வதேச சட்டத்தின் ஆதாரம் இல்லாத சட்டவிரோத ஒரு தரப்பு தடைகளை சீனா எப்போதுமே எதிர்ப்பதாகவும், தடைகளை அளவுக்கு மீறி மேற்கொள்வது மற்றும் நீண்ட கை அதிகார வரம்பு ஆகிய தவறான செயல்களை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துவதாகக் கூறினார்.

மேலும், நாட்டின் நிறுவனங்களின் நியாயமான உரிமைகளையும் நலன்களையும் சீனா உறுதியாகப் பாதுகாக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author