கடல் உயிரினங்களின் பல்வகைமை ஒப்பந்தத்திற்கான ஆயத்தக் குழுவின் 3ஆவது கூட்டத்தில் வாங்யீ உரை

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மார்ச் 25ஆம் நாள், கடல் உயிரினங்களின் பல்வகைமை ஒப்பந்தத்திற்கான ஆயத்தக் குழுவின் 3ஆவது கூட்டத்தில் காணொலி வழியாக உரை நிகழ்த்தினார்.

இதில் வாங்யீ கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின் ஆயத்தம் மற்றும் செயலாக்கம், பல தரப்புவாதத்திற்கு வெற்றியைத் தரும் எனக் குறிப்பிட்டார். மேலும் நியாயமான, சரியான உலகக் கடல் மேலாண்மை கட்டமைப்பை கட்டியமைக்கும் பொருட்டு, உலகளாவிய கடல் மேலாண்மையின் முக்கிய மைல் கல்லாக விளங்கும் இந்த ஒப்பந்தத்தின் வழி சீனா பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, இந்த ஒப்பந்தத்தை பன்முகங்களிலும் பயனுள்ளதாகவும் செயல்படுத்த பாடுபடும் என தெரிவித்தார்.

You May Also Like

More From Author