சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆகஸ்டு 16ஆம் நாள் கூறுகையில், ஆகஸ்டு 18 முதல் 20ஆம் நாள் வரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சரும், சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான சீனத் தரப்பின் சிறப்புப் பிரதிநிதியுமான வாங்யீ, இந்தியாவுக்குச் சென்று, சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதிகளின் 24வது சந்திப்பில் பங்கெடுக்கவுள்ளார் என்றார்.